Monday, January 11, 2010

இன்றைய காமடி.  உபயம்: கருணாநிதி. நன்றி: தினமலர் (ஜனவரி, 11, 2010) 
எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையின் இறுதியில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பாடலை இங்கே சொன்னார். அந்தப் பாட்டு அவர்களுக்காகப் பாடியதல்ல. என்னை மனதில் கொண்டு எம்.ஜி.ஆர்., பாடிய பாடல் அது. ஏனென்றால், எனது 40 ஆண்டுகால நண்பர் அல்லவா?தி.மு.க., கட்சித் தேர்தல் நடந்த போது, தலைவராக நான் தான் வர வேண்டுமென்று எண்ணி அதற்காகப் பாடுபட்டவர், அதற்காக ஆட்களைச் சேர்த்தவர். அந்த நன்றி எனக்குண்டு, சாகிற வரையில் உண்டு. அதேபோல, இந்தப் பொறுப்புக்கு நான் வர வேண்டுமென்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர்.ஆகவே அவருக்கும் எனக்கும் உள்ள நட்பின் காரணமாக சொல்கிறேன், இங்கு ஒரு பாடலை சொன்னாலும் கூட, அதை நான் இப்படித் தான் கருதிக் கொள்கிறேன். அதாவது ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்று தான், என்னைக் குறிப்பிட்டுத் தான் சொல்கிறார். ஒரு தலைவி இருக்கிறார் மயங்காதே என்று சொல்லவில்லை.இந்த சபையில் உள்ள உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருடைய அந்த நம்பிக்கையான வார்த்தையை ஏற்றுக் கொண்டு, இந்த சபையை சிறப்பாக நடத்த வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

உங்கள் இருவரின் நட்பு பற்றியும், தேர்தல் நேரத்தில் இருவரும் எதிரும் புதிருமாக போட்டியிட்டபோது எப்படி நாகரிகமாக நடந்துகொழ்வீர்கள்  என்பதும் இன்று இலவச தொலைக்காட்சியில் நமீதாவின் நடனத்தை பார்த்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நன்றாக தெரியுமே.
தேர்தல் தோல்வி என்றதும் எபோதும் mgr க்கும் அண்ணாவிற்கும் நாமம் மட்டுமே போடும் எதிர்க்கட்சி தலைவிக்கு  சட்டமன்றத்திலேயே mgr இன் பெயர்  நினைவு வந்துவிட்டது.

No comments:

Post a Comment