Wednesday, February 15, 2017

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு (DA Case)

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு:

பலருக்கும் பல அபிப்பிராயம் இருக்கிறது.
ஜெயலலிதா குற்றமற்றவர் எனவே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் மீதிருக்கும் குற்றம் A2, A3, A4 சசிகலா மற்றும் பலர் இவர்கள்தான் காரணம். ஜெயலலிதா அப்பாவி.
எல்லாருமே குற்றமற்றவர்கள். இது திமுகவின் சதி.

இதை எல்லாம் விட்டு விட்டு அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு எப்படி வந்திருக்கிறது. எந்தமாதிரியான தீர்ப்புகள் வர வாய்ப்பிருந்தது என்பதில் இருந்து யார் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கருதியது என்ற முடிவுக்கு வரலாம்.

இந்த தீர்ப்பில் இருக்கும் வேறுபட்ட முடிவுகள்  (permutation & combination) இதுவாகத்தான் இருக்க முடியும்.

1) விடுவிக்கப்பட்டால் A1, A2, A3, A4 எல்லாருமே விடுவிக்கப் பட்டிருப்பார்கள்.
2) தண்டிக்கப்பட்டால் A1, A2, A3, A4 எல்லாருமே தண்டிக்கப்பட்டிருப்பார்கள்.
3) A1 மட்டும் தண்டிக்கப்பட்டு மற்ற எல்லாரும் (A2, A3, A4) விடுவிக்கப்பட்டிருக்கலாம்.

இதில் இரண்டாவதுதான் நடந்திருக்கிறது. A1 மீதான தண்டனை சொல்லப்படவில்லை. எனவே அவர் நிரபராதி, குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப் படவில்லை.

எனவே குற்றமற்றவர் என்று சொல்லவேண்டுமானால் எப்போதும்போல திமுக வின் சதி என்றுவேண்டுமானால் அதே பாட்டை பயாடிக் கொள்ளுங்கள்.
நான் ஏற்கனவே சொல்லி வருவதுபோல திமுக ஒன்றும் யோக்கியன் இல்லை.
ஊழல், 2G, குடும்ப அரசியல், கேடி சகோதரர்கள், இலங்கை நிறைய கேள்விகள் வரலாறு அவர்கள் மீதும் இருக்கிறது.
எங்கள் மீதான குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. எனவே நாங்க குற்றமற்ற உத்தமர்கள் என்று திமுகவும், அதன் அபிமானிகளும் சொல்லக்கூடும். அது பற்றி என்னக்கு கருது ஏதும் இல்லை. (நோ கமெண்ட்ஸ்).

இதுதான் ஒரு நடுநிலை அரசியல் பார்வையாளனாக, சாமானியனானாக என்னுடைய கருத்து.