Monday, March 20, 2017

இளையராஜா பிரச்சினை குறித்து எனது அறிவுக்கு எட்டிய வரையில்.

இளையராஜா பிரச்சினை குறித்து எனது அறிவுக்கு எட்டிய வரையில்.

பாடல் யாருக்கு சொந்தம்? பாடல் என்பது இசை அமைப்பாளர், கவிஞர், பாடகர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் அனைவருக்கும் பொது. எல்லாருக்கும் ராயல்டி தரவேண்டும் என்பது சரி.

ஆனால் இது எப்போது சரி என்றால் முழு படமும் ஒளி பரப்பப்படும்போது அல்லது பாடல் காட்சி ஒளி பரப்பப்படும்போது. அனைத்து ராயல்டி/உரிமையும் தயாரிப்பாளருக்கே சொந்தம். ஆனால் திரும்பவும் இது முழு படத்துக்கும் அல்லது பாடல் காட்சிக்கும்.

இப்போ விசயம் வேற. பாடல் பாடுவது இசை குழுவுடன். அதுவும் வெளிநாட்டில். இது ஒன்றும் இலவசமாக அல்ல. நம்ம ஊர்ல கல்லூரிகள் அல்லது IIT போன்ற இடங்களுக்கு வந்து கச்சேரி செய்யும் பாடகர்கள் இலவசமாக செய்வது இல்லை.

வெறும் பாடல் மட்டும் பாடி கச்சேரி நடத்தினால் அதற்கு இசையமைப்பாளருக்கு ராயல்டி தரவேண்டும் என்பதில் தவறில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

இதற்கு கங்கைஅமரன் போன்ற ஆட்கள் எப்படா இளையராஜாவை குற்றம் சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருக்கும் ஆட்கள் MSV பாடலுக்கு ராயல்டி கேட்டாரா? திருவள்ளுவர் திருக்குறளுக்கு கேட்டாரா என்கிறார்கள். அவர்கள் கேட்கலாம். கேட்டால் கொடுக்க வேண்டியதுதான். அது அவர்களின் பெருந்தன்மை. இளையராஜா பாடல் போல அவை பணம் சம்பாதித்து கொடுத்தால் கேட்க வேண்டியதுதான். இப்போது முதிய காலத்தில் MSV க்கு எவ்ளவு பணம் தேவை படுகிறது.

எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா இருதய சிகிச்சைக்கு எவ்ளவு பணம் தேவை பட்டது. தெரிந்தவர்கள் உதவியினால் மட்டுமே சாத்தியம் என்றார் அவர். பண்பலை வானொலியில் இளையராஜா பாடல் ஒளிபரப்பினால் இலவசமாக அல்லவே. பணம் சம்பாதிக்கத்தானே. ராயல்டி கேட்டால் கொடுக்க வேண்டியதுதான்.

இதுதான் எனது நிலைப்பாடு. இசை அமைப்பாளர் அல்லது திரைப்பட தயாரிப்பாளர் யாருக்கு ராயல்டி உரிமை என்பது எனக்கு சரியாக புரியவில்லை.

இளையராஜா வயது, ஜாதி, திமிர்த்தனம் என்று சொல்வது தவறு. ராயல்டி கேட்கக்கூடாது என்றால் ஏன் என்று சொல்லி விளக்குவதுதான் சரியாக இருக்க முடியும்.