Wednesday, December 14, 2016

ட்விட்டர் என்னும் மாயப் பிசாசு

புதிதாக ட்விட்டர் வருபவர்களுக்கு. நான் அறிந்தவற்றை குறிப்புகளாக சொல்ல முயல்கிறேன்.
1) ட்விட்டர் என்பது யாரும் இல்லாத கடையில் டீ ஆத்துவதைப் போன்றது. உங்கள் ட்வீட்கள் யாருக்கும் தெரியாது.
2) முதலில் கொஞ்ச பேரை follow செய்யுங்கள். அவர்களின் பழைய ட்வீட்களை படித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் follow செய்யுங்கள். உடனே அவர்கள் உங்களை follow செய்ய மாட்டார்கள். அவர்களின் ட்வீட்கள் தொடர்ந்து படியுங்கள். நீங்கள் அதற்கு உங்கள் மறு கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்கள் பதில் நாகரிகமானதாக இருக்கட்டும். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் நிறைய பேருக்கு அறிமுகம் ஆக வாய்ப்பு கிடைக்கும்.
3) முடிந்தவரை எல்லாரையும் "நீங்கள்" என்று பன்மையில் அழையுங்கள். "நீ" என்று ஒருமையில் அழைக்காதீர்கள். ஒன்று அவரைப் பற்றி நமக்கு personal ஆக அறிமுகம் இல்லாதவரை, இந்த பன்மை அழைப்பு நன்று. அதுபோக, நிறைய பேர் தங்கள் profile photo அவர்கள் photo வைத்திருக்க மாட்டார்கள். அதனால் அவர்களின் உண்மையான வயதை நேரில் சந்திப்பதுபோல எளிதாக guess செய்ய முடியாது.
4) Your Tweet Activity கொஞ்ச நாளைக்கு அடிக்கடி check செய்து பாருங்கள். இதில் உங்களின் tweets எந்த நேரத்தில் அதிகமாகப் படிக்கப் படுகிறது என்பது தெரிய வரும். அந்த நேரத்தில் கூடுமான வரை உங்களின் tweets போட முயலுங்கள்.
5) அப்படி இல்லையானால் tweetdeck.com வலைத்தளத்தில் உங்களின் twitter account வைத்து சேருங்கள். பிறகு எந்த நேரத்தில் உங்களின் tweets வலையேற்றப்பட வேண்டும் என்று set செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் online ல் இல்லா விட்டாலும் உங்களின் tweets பதிவேற்றப்படும்.
6) ஒருவர் பதியும் tweets உங்களுக்கு பிடிக்க வில்லையானால் அந்தப் பதிவரை தொடர்வதைத் தவிருங்கள். வீண் வாதம் செய்வதைத் தவிருங்கள்.
7) உங்கள் tweet க்கு யாராவது பதில் சொன்னால் அவருக்கு மறு பதில் சொல்ல முயலுங்கள். உங்கள் tweet க்கு பதிலுடுவதன் மூலம் அவர் உங்களிடம் தொடர்பு கொள்ள முயலுகிறார் என்று அர்த்தம். ஒன்னும் இல்லாவிட்டால் ஒரு ஸ்மைலி யாவது பதிலிடுங்கள்.
8) மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை பதிவிடுவதைத் தவிருங்கள்.
9) நேரம் போகாவிட்டால் எப்போதும் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயங்கள் கொஞ்சம் இருக்கின்றன. அவற்றை கையில் எடுங்கள். இளையராஜா-ரகுமான், கமல்-ரஜினி, அஜித்-விஜய் இப்படி.
10) # என்பது ஒரே கருத்து அல்லது விஷயம் தொடர்பான tweet களுக்கு பயன்படும். உதாரணமாக #WorldBookDay என்பது, world book day அன்று புத்தகங்கள் படிப்பது தொடர்பான tweet கள். இது எளிதாக ஒரே topic பற்றிய tweets எளிதாக தேட உதவும்.
11) கடைசியாக ரொம்ப முக்கியமான விஷயம். முதலில் இதில் ஏன்டா சேர்ந்தோம். யாருமே நம்மை follow செய்யவில்லையே என்று கொஞ்ச நாளில் நிறுத்திவிட தோன்றும். பிறகு நீங்கள் நினைத்தாலும் நிறுத்த முடியாது. அதனால் உங்களுக்கு நிறைய நேரம் இருந்தால் மட்டுமே இதில் சேருங்கள். இல்லையானால் ஒரு குறிப்பிட்ட கொஞ்ச நேரத்திற்கு மட்டுமே இதை பயன் படுத்துங்கள்.
12) தனிப்பட்ட உங்களின் personal விஷயங்கள் share செய்வதை தவிருங்கள்.
13) நீங்கள் செய்திப் பிரியராக இருந்தால் உங்களுக்கு நிறைய செய்தித் தாள்களும், டிவி சானல்களும் தங்கள் செய்திகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யும். நிறைய breaking news, twitter மூலமாக முதலில் தெரிய வரும்.
14) உங்களை நிறைய பேர் follow செய்ய வேண்டும் என்று நினைத்து வெறியோடு tweets பதிவிடாதீர்கள். உங்கள் மனதுக்கு என்ன படுகிறதோ அதை எல்லாருக்கும் புரியும்படி எளிதான tweets களாக பதிவிடுங்கள்.
15) அட நன்றாக இருக்கிறதே. வித்தியாசமாக இருக்கிறதே. நான் நினைச்சேன் இவர் சொல்லிட்டார். இப்படிப் பட்ட tweets உங்கள் கண்ணில் பட்டால் அதை RT (ReTweet) செய்யுங்கள். RT செய்வதன் மூலம் அந்த tweet களை நீங்கள் உங்களின் followers பார்க்க அனுப்புகிறீர்கள்.
இந்த link மூலம் பிறகு அது தொடர்பான விஷயங்கள் படிக்க வேண்டும். அல்லது ஏதாவது புத்தகம் படிக்க வேண்டும் என்றால் அதை favourite செய்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேடி எடுத்துப் படிக்க உதவும்.
16) இன்னும் முக்கியமான ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் அதை கொஞ்ச பேர் ஆதரிப்பார்கள், கொஞ்சப் பேர் எதிர்ப்பார்கள். அதனால் எதிர்வினையாற்றுபவர்களுடன் தொடர்ந்து விவாதத்தில் ஈடுபடாதீர்கள். 2-3 பதிலுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். என்னதான் விவாதம் செய்தாலும் யாரையும் யாரும் மாற்ற முடியாது. Twitter இருப்பவர்கள் எல்லாருமே நிறைய விசயத்தில் ஒரு முன்முடிவுடன் இருப்பவர்களே. நானெல்லாம் ராமராஜன் பற்றி கருத்து சொன்னதற்கு அவரின் ரசிகர் மன்றத் தலைவர் வந்து திட்டிவிட்டுப் போனார். அதை எல்லாம் just like that தட்டி விட்டுக்கொண்டு போய் கொண்டே இருக்கவேண்டும்.

Twitter க்கு வெளியேதான் நிறைய வாழ்க்கை இருக்கிறது.

அடுத்த பதிவில் நான் follow செய்யும் நண்பர்கள் பற்றி சொல்கிறேன்.