Wednesday, January 13, 2010

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்


சொல்வது:
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். உலகத்துக்கு சக்தி கொடுக்கும் சூரியனை (உதய அல்ல) எல்லோரும் நினைவில் கொண்டு நன்றி சொல்லுவோம்.
சொல்ல நினைப்பது:
பென்னாகரம் மக்களும் இன்று எல்லோரையும் போல பொங்கல் கொண்டாடுவார்களா?

Monday, January 11, 2010

சினிமா திருட்டும் அழுகையும்

இந்த பதிவு தமிழனின் தலையாய பிரச்சினை யாக முதல்வர் கருதும் ஜக்குபாய் பிரச்சினை. இதை முதலில் கவனித்து நடவடிக்கை எடுக்கும் படி சரத்குமாரும், ராதிகாவும் கேட்டவுடன் வாழும் வள்ளுவர் நடவடிக்கை எடுத்ததும் ராதிகாவுக்கு கண்கள் பணித்ததும் எல்லோரும் ஏற்கனவே பார்த்தாயிற்று. இதில் ரஜினியின் பேச்சு சற்று பரவாயில்லை. பிரச்சினை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து அதை தீர்க்கவேண்டும் என்று அவர் சொன்னது சரிதான் என்றாலும் வழக்கம்போல் பிறர் எதிர்த்து அறிக்கை கொடுப்பதற்கும் தான் பிறகு மன்னிப்பு கேட்பதற்கும் ஏதுவாக அவர் பேச்சு அமைந்து விட்டது. மற்ற எல்லாரின் பேச்சுக்கள் எல்லாமே அந்த கூடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று பேசியது போல இருந்தது. இருந்தாலும் இந்த சாதரானின் சந்தேகம் என்ன என்றல் இவர்கள் கருனநிதியைய்ம், எம் ஜி ஆரையும் நினைத்த நேரத்தில் எப்படி பார்க்க முடிகிறது? ஒரு சாதாரண ஆள் ஒரு அரசாங்க அதிகாரியையே பார்க்க தவம் கிடக்கும் போது இது மட்டும் எப்படி முடிகிறது? பத்திரிகைகள் ஓங்கி குரல் கொடுத்தன தினமலரின் பிரச்சினையின் போது. ஆனால் எந்த பத்திரிகைக்கும் சினிமா நியூஸ் இல்லாமல் காலம் தள்ள முடியாது என்பது நன்கு தெரியும் (துக்ளக் ஒரு விதி விலக்கு. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது நான் ஒரு அத்தாட்சி கைஎளுதிர்காக எங்கள் ஊரின் மருத்துவரை (இவர் அவர் இல்லை) பார்க்க போனபோது அவர் தனது ஒவொரு கைஎளுதிர்க்கும் விலை வைத்திருந்தார். அவரை பார்க்கவும், அவர் எதிர் பார்த்ததை கொடுத்தாலும் நான் அவளவு நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இவர்கள் எந்த தைரியத்தில், எதனால் இவளவு சீக்கிரம் மாநிலத்தின் சக்தி வாய்ந்த அதிகாரியை (டெல்லியின் தலை நகரில் வசிப்பவர்) சந்திக்க முடிகிறது? இதை எல்லாரும் விட்டு விட்டு ரஜினி பேசியது சரியா? கமல் பேசியது சரியா? ராதிகா, சரத்குமார் அழுதது நிசமா? என்று தான் பேசுகிறார்கள். அனைத்து blog களிலும் இதுதான் செய்தி. சினிமாவை விட்டு எப்போதுதான் வெளியே வரப் போகிறோம்?
இன்றைய காமடி.  உபயம்: கருணாநிதி. நன்றி: தினமலர் (ஜனவரி, 11, 2010) 
எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையின் இறுதியில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பாடலை இங்கே சொன்னார். அந்தப் பாட்டு அவர்களுக்காகப் பாடியதல்ல. என்னை மனதில் கொண்டு எம்.ஜி.ஆர்., பாடிய பாடல் அது. ஏனென்றால், எனது 40 ஆண்டுகால நண்பர் அல்லவா?தி.மு.க., கட்சித் தேர்தல் நடந்த போது, தலைவராக நான் தான் வர வேண்டுமென்று எண்ணி அதற்காகப் பாடுபட்டவர், அதற்காக ஆட்களைச் சேர்த்தவர். அந்த நன்றி எனக்குண்டு, சாகிற வரையில் உண்டு. அதேபோல, இந்தப் பொறுப்புக்கு நான் வர வேண்டுமென்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர்.ஆகவே அவருக்கும் எனக்கும் உள்ள நட்பின் காரணமாக சொல்கிறேன், இங்கு ஒரு பாடலை சொன்னாலும் கூட, அதை நான் இப்படித் தான் கருதிக் கொள்கிறேன். அதாவது ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்று தான், என்னைக் குறிப்பிட்டுத் தான் சொல்கிறார். ஒரு தலைவி இருக்கிறார் மயங்காதே என்று சொல்லவில்லை.இந்த சபையில் உள்ள உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருடைய அந்த நம்பிக்கையான வார்த்தையை ஏற்றுக் கொண்டு, இந்த சபையை சிறப்பாக நடத்த வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

உங்கள் இருவரின் நட்பு பற்றியும், தேர்தல் நேரத்தில் இருவரும் எதிரும் புதிருமாக போட்டியிட்டபோது எப்படி நாகரிகமாக நடந்துகொழ்வீர்கள்  என்பதும் இன்று இலவச தொலைக்காட்சியில் நமீதாவின் நடனத்தை பார்த்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நன்றாக தெரியுமே.
தேர்தல் தோல்வி என்றதும் எபோதும் mgr க்கும் அண்ணாவிற்கும் நாமம் மட்டுமே போடும் எதிர்க்கட்சி தலைவிக்கு  சட்டமன்றத்திலேயே mgr இன் பெயர்  நினைவு வந்துவிட்டது.
நான் சொல்ல நினைப்பதை தைரியமாக சொல்லும் இடம் இது. விளையாட்டு, வேடிக்கை, கிண்டல், அரசியல், உள்க்குத்து மற்றும் பல விஷயங்கள் இங்கே எழுதுகிறேன்.    விரைவில்.........................