Tuesday, June 2, 2020

பிரபஞ்சம் எவ்ளவு பெரிசு? ஏலியன்ஸ் இருக்கிறார்களா?

வானத்தை பார்த்துக்கொண்டே ஒரு அடி தூரத்தில் நம்ம கட்டை விரலை வைத்து அந்த இடத்தில் மட்டும் கண் பார்வையை தடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த கட்டைவிரல் அளவுள்ள வானத்தில் அருகிலும், தூரத்திலுமாக ஆயிரக்கணக்கான கேலக்சிகள் உள்ளன. நாம் இருப்பது Milky Way என்னும் கேலக்சி. மொத்தம் நமது டெலஸ்கோப்புகள் பார்வையிட முடிந்த பிரபஞ்சத்தில் (Observable universe) கிட்டத்தட்ட 200 பில்லியன் (200,000,000,000 - இரண்டு லட்சம் கோடிகள்) கேலக்சிகள் இருக்கலாம் என்பது அனுமானம்.

நாம் இருக்கும் Milky Way அப்படி ஒரு கேலக்சி. சூரியன் அதில் ஒரு நட்சத்திரம். இந்த Milky Way இல் மட்டும் சூரியனை போல 100 முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கலாம். அதில் சூரியனை போல எல்லாவற்றுக்கும் கோள்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனா தோராயமா Milky Way இல் 200 பில்லியன் கோள்கள் இருக்கலாம் என்கிறார்கள். அதில் பூமி ஒரு கோள். அதில் நாம் இருக்கிறோம். நாம் அறிந்த வரையில் சூரிய குடும்பத்தில் பூமியில் மட்டுமே உயிர்கள் உள்ளது. ஆனால் மற்ற நட்சத்திரங்களின் கோள்கள், மற்ற கேலக்சியில் இருக்கும் நட்சத்திரங்கள், அவற்றின் கோள்கள் இதை பற்றி எல்லாம் நமக்கு தெரியாது.

200 பில்லியன் கேலக்சிகள், ஒவ்வொரு கேலக்சியிலும் 200 பில்லியன் நட்சத்திரங்கள், அவற்றின் கோள்கள் இதெல்லாம் மலைக்க வைக்கும் எண்ணிக்கை. சிம்பிளா Probability படி பார்த்தால் ஒவ்வொரு கேலக்சியிலும் பூமி மாதிரி ஒரு இடம் (1 in 200,000,000,000 chance) இருக்குன்னு வச்சாலும் மொத்தம் 200 பில்லியன் கேலக்சிகள் என்பதால் பூமியை போல ரெண்டு லட்சம் கோடி (200,000,000,000) கோள்கள் இருக்கலாம். அதில் 1% மட்டும் உயிர்கள் இருக்குன்னு வச்சாலும் (2,000,000,000) 200 கோடி கோள்களில் உயிரினங்கள் இருக்கலாம்.

அதனால் ஏலியன்ஸ் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் அவைகள் பார்வையில் நாமும் ஏலியன்ஸ்தான். ஆனா அப்படி ஒரு கோளை கண்டுபிடித்தால் நாம் அங்கேயோ, அவர்கள் இங்கேயோ வர சாத்தியம் ரொம்ப குறைவு. ஏனெனில் பூமிக்கு மிக அருகே இருக்கும் நட்சத்திரமே ரொம்ப தூரம். 4 ஒளி ஆண்டுகள். அதாவது ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் 4 ஆண்டுகள் ஆகும். ஒளியின் வேகம் என்ன? கிட்டத்தட்ட 3 லட்சம் கிலோ மீட்டர்கள் ஒரு வினாடிக்கு (300,000 km/sec). இந்த வேகத்தில் நாம் பூமியை சுற்றி வருகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி வந்தால் ஒரே வினாடியில் கிட்டத்தட்ட 7 முறை பூமியை சுற்றி வந்து விடலாம். ஏனெனில் பூமியின் சுற்றளவு வெறும் 40,000 கிமீ தான்.

இந்த வேகத்தில் 4 வருடம் பயணம் செய்தீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போ சூரியனின் மிக அருகில் இருக்கும் (Alpha Centauri A and B) நட்சத்திரத்துக்குக்கு போய் விடலாம். Milky Way எவ்ளவு பெரிசு? 4 லட்சம் ஒளி ஆண்டுகள். அதாவது மொத்த பூமியை ஒரே வினாடியில் 7 முறை சுற்றி வரும் அளவுக்கு (speed of light) ராக்கெட் கண்டு பிடித்தீர்கள் என்றால் அந்த ராக்கெட்டில் நீங்கள் Milky Way இன் ஒரு முனையில் பயணம் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் அடுத்த முனை போய் சேர just 4 லட்சம் ஆண்டுகள்தான் ஆகும். இது நாம் இருக்கும் Milky Way மட்டும். இதுபோல் பிரபஞ்சம், பிரபஞ்சத்தின் கேலக்சிகள், கேலக்சியின் நட்சத்திரங்கள், நட்சத்திரங்களின் கோள்கள் இப்படி கீழிறங்கி வர வேண்டும்.

அதனால் ஏலியன்ஸ் இருக்கலாம். சந்திப்பது மிக மிக மிக அரிது. ஏலியன்ஸுக்கு பதில் கடலில் கரைத்த பெருங்காயத்தை கூட கண்டு பிடித்து விடலாம்.

No comments:

Post a Comment